102
இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறைஇட்டு்
                இரைத்திடும் அரிச்சிலம்பும்
        இறும்இறும் மருங்குஎன்று இரங்குமே கலையும்பொன்
                எழுதுசெம் பட்டுவீக்கும்

திருவிடையும் உடைதார மும்ஒட் டியாணமும்
                செங்கைப் பசுங்கிள்ளையும்
        திருமுலைத் தரளஉத் தரியமும் மங்கலத்
                திருநாணும் அழஒழுகநின்று

அருள்பொழியும் மதிமுகமும் முகமதியின் நெடுநிலவு
                அரும்புகுறு நகையும்ஞான
        ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு
                அமராடும் ஓடரிக்கண்

பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி
                பொன்ஊசல் ஆடிஅருளே
        புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
                பொன்ஊசல் ஆடிஅருளே
உரை