13
நீராட்டி ஆட்டுபொன் சுண்ணம் திமிர்ந்துஅள்ளி
                நெற்றியில் தொட்டிட்ட வெண்
        நீற்றினொடு புண்டரக் கீற்றுக்கும் ஏற்றிடஒர்
                நித்திலச் சுட்டிசாத்தித்

தாராட்டு சூழியக் கொண்டையும் முடித்துத்
                தலைப்பணி திருத்திமுத்தின்
        தண்ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர்
                தமனியக் கொப்பும்இட்டுப்

பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்
                பால்அமுதம் ஊட்டிஒருநின்
        பால்நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல்தன்
                பட்டாடை மடிநனைப்பச்

சீராட்டி வைத்துமுத்து ஆடும் பசுங்கிள்ளை
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை