சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய எட்டுச் சுவர்க்கால் நிறுத்திமேருத் தூண்ஒன்று நடுநட்டு வெளிமுகடு மூடிஇரு சுடர்விளக்கு இட்டுமுற்ற எற்று புனலில்கழுவு புவனப் பழங்கலம் எடுத்துஅடுக்கிப் புதுக்கூழ் இன்னமுதமும்சமைத்து அன்னைநீ பன்முறை இழைத்திட அழித்துஅழித்துஓர் முற்றவெளி யில்திரியும் மத்தப் பெரும்பித்தன் முன்நின்று தொந்தம் இடவும் முனியாது வைகலும் எடுத்துஅடுக்கிப்பெரிய மூதண்ட கூடம்மூடும் சிற்றில்விளை யாடும்ஒரு பச்சிளம் பெண்பிள்ளை செங்கீரை ஆடிஅருளே தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி செங்கீரை ஆடிஅருளே |