17
பண்அறா வரிமிடற்று அறுகால் மடுப்பப்
                பசுந்தேறல் ஆறலைக்கும்
        பதும பீடிகையும்முது பழமறை விரிந்துஒளி
                பழுத்தசெந்நாவும்இமையாக்

கண்அறா மரகதக் கற்றைக் கலாம்மஞ்ஞை
                கணமுகில் ததும்ப ஏங்கும்
        கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்
                கற்பூர வல்லிகதிர்கால்

விண்அறா மதிமுயல் கலைகிழிந்து இழிஅமுத
                வெள்அருவி பாயவெடிபோய்
        மீளும் தகட்டுஅகட்டு இளவாளை மோதமுகை
                விண்டுஒழுகும் முண்டகப்பூந்

தெள்அறா அருவிபாய் மதுரைமர கதவல்லி
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை