18

(வேறு)

முகமதி ஊடுஎழு நகைநிலவு ஆட
                முடிச்சூ ழியம்ஆட
        முருபுரி வக்கொடி நுதல்இடு சுட்டி
                முரிப்பொடு அசைந்துஆட

இகல்விழி மகரமும் அம்மக ரம்பொரும்
                இருமக ரமும்ஆட
        இடுநூ புரஅடி பெயரக் கிண்கிண்
                எனும்கிண் கிணிஆடத்

துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குல்
                துவண்டு துவண்டுஆடத்
        தொந்தி சரிந்திட உந்தி கரந்துஒளிர்
                சூலுடை யால்அடைமற்று

அகில சராசரம் நிகிலமோடு ஆடிட
                ஆடுக செங்கீரை
        அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
                ஆடுக செங்கீரை
உரை