தசைந்திடு கொங்கை இரண்டல எனவுரை தருதிரு மார்புஆடத் தாய்வருக என்பவர் பேதமை கண்டு ததும்புபுன் னகைஆடப் பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறிஒர் பச்சுடல் சொல்லவும்ஒர் பைங்கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய பண்டி சரிந்துஆட இசைந்திடு தேவை நினைந்தன என்ன இரங்கிடு மேகலையோடு இடுகுஇடை ஆட இயற்கை மணம்பொதி இதழ்வழி தேறலினோடு அசைந்துஒசி கின்ற பசுங்கொடி எனஇனிது ஆடுக செங்கீரை அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் ஆடுக செங்கீரை |