(வேறு) குருமணி வெயில்விட மரகத நிழல்விரி குன்றே நின்றுஊதும் குழல்இசை பழகிய மழைமுகில் எழஎழு கொம்பே வெம்பாசம் மருவிய பிணிகெட மலைதரும் அருமைம ருந்தே சந்தானம் வளர்புவ னமும்உணர் வரும்அரு மறையின்வ ரம்பே செம்போதில் கருணையின் முழுகிய கயல்திரி பசியக ரும்பே வெண்சோதிக் கலைமதி மரபிலொர் இளமயில் எனவளர் கன்றே என்றுஓதும் திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள் செங்கோ செங்கீரை தெளிதமிழ் மதுரையில் வளருமொர் இளமயில் செங்கோ செங்கீரை |