24
வீக்கும் சிறுபைந் துகில்தோகை விரியும்
                கலாபம் மருங்குஅலைப்ப
        விளையாட்டு அயரும் மணல்சிற்றில் வீட்டுக்
                குடிபுக்கு ஓட்டிஇருள்

சீக்கும் சுடர்தூங்கு அழல்மணியின் செந்தீ
                மடுத்த சூட்டுஅடுப்பில்
        செழுந்தாள் பவளத் துவர்அடுக்கித் தெளிக்கும்
                நறுந்தண் தேறல்உலை

வாக்கும் குடக்கூன் குழிசியில்அம் மதுவார்த்து
                அரித்த நித்திலத்தின்
        வல்சி புகட்டி வடித்துஎடுத்து வயல்மா
                மகளிர் குழாம்சிறுசோறு

ஆக்கும் பெருந்தண் பணைமதுரைக்கு அரசே
                தாலோ தாலேலோ
        அருள்சூல் கொண்ட அங்கயல்கண் அமுதே
                தாலோ தாலேலோ
உரை