ஓடும் படலை முகில்படலம் உவர்நீத்து உவரி மேய்ந்துகரு ஊறும் கமம்சூல் வயிறுஉடைய உகைத்துக் கடவுள் கற்பகப்பூங் காடும் தரங்கக் கங்கைநெடுங் கழியும் நீந்தி அமுதுஇறைக்கும் கலைவெண் மதியின் முயல்தடவிக் கதிர்மீன் கற்றை திரைத்துஉதறி மூடும் ககன வெளிக்கூட முகடு திறந்து புறம்கோத்த முந்நீர் உழக்கிச் சினவாளை மூரிச் சுறவி னோடும்விளை யாடும் பழனத் தமிழ்மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ |