27
வார்க்குன்று இரண்டு சுமந்துஒசியும் மலர்க்கொம்பு
                அனையார் குழல்துஞ்சும்
        மழலைச் சுரும்பர் புகுந்துஉழக்க மலர்த்தாது
                உகுத்து வான்நதியைத்

தூர்க்கும் பொதும்பில் முயல்கலைமேல் துள்ளி
                உகளும் முசுக்கலையின்
        துழனிக்கு ஒதுங்கிக் கழினியின்நெல் சூட்டுப்
                படப்பை மேய்ந்துகதிர்ப்

போர்க்குன்று ஏறுங் கருமுகிலை வெள்வாய்
                மள்ளர் பிணையலிடும்
        பொருகோட்டு எருமைப் போத்தினொடும் பூட்டி
                அடிக்க இடிக்குரல்விட்டு

ஆர்க்கும் பழனத் தமிழ்மதுரைக்கு அரசே
                தாலோ தாலேலோ
        அருள்சூல் கொண்ட அங்கயல்கண் அமுதே
                தாலோ தாலேலோ
உரை