(வேறு) காரில் பொழிமழை நீரில் சுழிஎறி கழியில் சிறுகுழியில் கரையில் கரைபொரு திரையில் தலைவிரி கண்டலில் வண்டலின்நெற் போரில் களநிறை சேரின் குளநிறை புனலில் பொருகயலில் பொழிலில் சுருள்புரி குழலில் கணிகையர் குழையில் பொருகயல்போய்த் தேரில் குமரர்கள் மார்பில் பொலிதரு திருவில் பொருவில்வரிச் சிலையில் திரள்புய மலையில் புலவி திருத்திட ஊழ்த்தமுடித் தாரில் பொருதிடும் மதுரைத் துரைமகள ் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி தாலோ தாலேலோ |