சேனைத் தலைவர்கள் திசையின் தலைவர்கள் செருவின் தலைவர்களால் சிலையில் தடமுடி தேரின் கொடியொடு சிந்தச் சிந்திஇடும் சோனைக் கணைமழை சொரியப் பெருகிய குருதிக் கடல்இடையே தொந்த மிடும்பல் கவந்தம் நிவந்துஒரு சுழியில் பவுரிகொள ஆணைத் திரளொடு குதிரைத் திரளையும் அப்பெயர் மீனைமுகந்து அம்மனை ஆடு கடல்திரை போல அடல்திரை மோதஎழும் தானைக் கடலொடு பொலியும் திருமகள் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி தாலோ தாலேலோ |