சிவபெருமான் (வேறு) சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒருபொரு வில்எனக் கோட்டினர் செடிகொள் பறிதலை அமணர் எதிர்எதிர் செலவொர் மதலைசொல் வைகையிற் கூட்டினர் திருவும் இமையவர் தருவும் அரவொலி செயவ லவர்கொள நல்குகைத் தீட்டினர் சிறிய எனதுபுன் மொழியும் வடிதமிழ் தெரியும் அவர்முது சொல்எனச் சூட்டினர் பகரும் இசைதிசை பரவ இருவர்கள் பயிலும் இயல்தெரி வெள்வளைத் தோட்டினர் பசிய அறுகொடு வெளிய நிலவிரி பவள வனம்அடர் பல்சடைக் காட்டினர் பதும முதல்வனும் எழுத அரியதொர் பனுவல் எழுதிய வைதிகப் பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பதயுகம் உள்ளம்வைத்து ஏத்துதும் தகரம் ஒழுகிய குழலும் நிலஉமிழ் தரள நகையும்எம் ஐயனைப் பார்த்துஎதிர் சருவி அமர்பொரு விழியும் மறுகிடை தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன தனமும் மன் உற எழுதி எழுதரு தமது வடிவையும் எள்ளிமட்டு ஊற்றிய தவள மலர்வரும் இளமின் ஒடுசத தளமின் வழிபடு தையலைத் தூத்திரை மகரம் எறிகடல் அமுதை அமுதுஉகு மழலை பழகிய கிள்ளையைப் பேட்டன மடவ நடைபயில் பிடியை விரைசெறி வரைசெய் புயமிசை வையம்வைத்து ஆற்றிய வழுதி உடையகண் மணியொடு உலவுபெண் மணியை அணிதிகழ் செல்வியைத் தேக்கமழ் மதுரை ஒழுகிய தமிழின் இயல்பயில் மதுரை மரகத வல்லியைக் காக்கவே |