அமரர்க்கு அதிபதி வெளிறக் களிறுஎதிர் பிளிறக் குளிறியிடா அண்ட மிசைப் பொலி கொண்டல் உகைத்திடும் அமரில் தமரினொடும் கமரில் கவிழ்தரு திசையில் தலைவர்கள் மலையில் சிறகுஅரியும் கடவுள் படையொடு பிறகிட்டு உடைவது கண்டு முகங்குளிராப் பமரத் தருமலர் மிலையப் படுமுடி தொலையக் கொடுமுடி தாழ் பைம்பொன் தடவரை திரியக் கடல்வயிறு எரியப் படைதிரியாச் சமரில் பொருதிரு மகனைத் தருமயில் தாலோ தாலேலோ சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி தாலோ தாலேலோ |