31
முதுசொல் புலவர் தெளித்த பசுந்தமிழ்
                நூல்பாழ் போகாமே
        முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை
                கீழ்மேல் ஆகாமே

அதிரப் பொருது கலிப்பகை ஞன்தமிழ்
                நீர்நாடு ஆளாமே
        அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை
                நீள்நீர் தோயாமே

சிதைவுற்று அரசியல் நல்தரு மம்குடி
                போய்மாய்வு ஆகாமே
        செழியர்க்கு அபயரும் ஒப்புஎன நின்றுஉண
                ராதார் ஓதாமே

மதுரைப் பதிதழை யத்தழை யும்கொடி
                தாலோ தாலேலோ
        மலயத் துவசன் வளர்த்த பசுங்கிளி
                தாலோ தாலேலோ
உரை