32
தகரக் கரிய குழற்சிறு பெண்பிளை
                நீயோ தூயோன்வாழ்
        சயிலத்து எயிலை வளைப்பவள் என்றெதிர்
                சீறா வீறோதா

நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபி
                ரானோ டேஓடா
        நிலைகெட்டு உலைய உடற்றஉ டைந்துஒர்
                ஆனேறு ஆகாமே

சிகரப் பொதிய மிசைத்தவ ழும்சிறு
                தேர்மே லேபோய்ஓர்
        சிவனைப் பொருத சமர்த்தன்உ கந்துஅருள்
                சேல்போல் மாயாமே

மகரத் துவசம் உயர்த்தபொ லன்கொடி
                தாலோ தாலேலோ
        மலயத் துவசன் வளர்த்தப சுங்கிளி
                தாலோ தாலேலோ
உரை