34
பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடிஞ்சிப்
                பொலந்தேரொடு அமர்அகத்துப்
        பொன்மேரு வில்லியை எதிர்ப்பட்ட ஞான்றுஅம்மை
                பொம்மல்முலை மூன்றில்ஒன்று

கைவந்த கொழுநரொடும் உள்ளப் புணர்ச்சிக்
                கருத்தான் அகத்துஒடுங்கக்
        கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத் திடும்ஒரு
                கடைக்கண்நோக்கு அமுதம்ஊற்ற

மெய்வந்த நாணினொடு நுதல்வந்து எழுங்குறு
                வெயர்ப்பினொடு உயிர்ப்புவீங்கும்
        விம்மிதமு மாய்நின்ற உயிர்ஓவம் எனஊன்று
                விற்கடை விரல்கடைதழீ இத்

தைவந்த நாணினொடுதவழ்தந்த செங்கைகொடு
                சப்பாணி கொட்டிஅருளே
        தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
                சப்பாணி கொட்டிஅருளே
உரை