பூமரு வெடிப்பமுகை விண்டதண் டலைஈன்ற புனைநறுந் தளிர்கள் கொய்தும் பொய்தல் பிணாக்களொடு வண்டல் கலம்பெய்து புழுதிவிளை யாட்டுஅயர்ந்தும் காமரு மயில்குஞ்சு மடஅனப் பார்ப்பினொடு புறவுபிற வும்வளர்த்தும் காந்தள்செங் கமலத்த கழுநீர் மணந்துஎனக் கண்பொத்தி விளையாடியும் தேமரு பசுங்கிள்ளை வைத்துமுத்து ஆடியும் திரள்பொன் கழங்குஆடியும் செயற்கையான் அன்றியும் இயற்கைச் சிவப்புஊறு சேயிதழ் விரிந்ததெய்வத் தாமரை பழுத்தகைத் தளிர்ஒளி துளும்பஒரு சப்பாணி கொட்டிஅருளே தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி சப்பாணி கொட்டிஅருளே |