39
சமரில் பிறகிடும் உதியரும் அபயரும்
                எதிரிட்டு அமர்ஆடத்
        தண்ட தரன்செல் கரும்பகடு இந்திரன்
                வெண்பகடோடு உடையாத்

திமிரக் கடல்புக வருணன் விடும்சுறவு
                அருணன் விடும்கடவுள்
        தேரின் உகண்டுஎழு வார்வில் வழங்கு
                கொடுங்கோல் செங்கோலா

இமயத் தொடும்வளர் குலவெற்பு எட்டையும்
                எல்லைக் கல்லின்நிறீஇ
        எண்திசை யும்தனி கொண்டு புரந்து
                வடாது கடல்துறைதென்

குமரித் துறைஎன ஆடும் மடப்பிடி
                கொட்டுக சாப்பாணி
        குடைநிழ லில்புவி மகளை வளர்த்தவள்
                கொட்டுக சப்பாணி
உரை