41

(வேறு)

ஒழுகிய கருணைஉ வட்குஎழு வைத்தஅ ருள்பார்வைக்கு
                உளநெகிழ் அடியர்ப வக்கடல் வற்றஅ லைத்துஓடிக்
        குழையொடு பொருதுகொ லைக்கணை யைப்பிணை யைச்சீறீக்
                குமிழொடு பழகிம தர்த்தக யல்கண்ம டப்பாவாய்
        தழைகெழு பொழிலின்மு சுக்கலை மைப்புய லில்பாயத்
                தவழ்இள மதிகலை நெக்குகு புத்துஅமு தத்தோடே
        மழைபொழி இமயம யில்பெடை கொட்டுக சப்பாணி
                மதுரையில் வளரும் மடப்பிடி கொட்டுக சப்பாணி
உரை