காலத் தொடுகற் பனைகடந்த கருவூ லத்துப் பழம்பாடல் கலைமாச் செல்வர் தேடிவைத்த கடவுள் மணியே உயிர்ஆல வாலத்து உணர்வு நீர்பாய்ச்சி வளர்ப்பார்க்கு ஒளிபூத்து அருள்பழுத்த மலர்க்கற் பகமே எழுதாச்சொல் மழலை ததும்பு பசுங்குதலைச் சோலைக் கிளியே உயிர்த்துணையாம் தோன்றாத் துணைக்குஓர் துணைஆகித் துவாத சாந்தப் பெருவெளியில் துரியங் கடந்த பரநாத மூலத் தலத்து முளைத்தமுழு முதலே முத்தம் தருகவே முக்கண் சுடர்க்கு விருந்துஇடும்மும் முலையாய் முத்தம் தருகவே |