மத்த மதமாக் கவுட்டுஒருநான் மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த வானத்து அரசு கோயில்வளர் சிந்தா மணியும் வடபுலத்தார் நத்தம் வளர அளகையர்கோன் நகரில் வளரும் வான்மணியும் நளினப் பொகுட்டில் வீற்றுஇருக்கும் நங்கை மனைக்குஒர் விளக்கம்எனப் பைத்த கடிகைப் படப்பாயல் பதும நாபன் மார்பில்வளர் பரிதி மணியும் எமக்குஅம்மை பணியல் வாழி வேய்ஈன்ற முத்தம் உகந்த நின்கனிவாய் முத்தம் தருக முத்தமே முக்கண் சுடர்க்கு விருந்திடும்மும் முலையாய் முத்தம் தருகவே |