47
கோடும் குவடும் பொருதரங்கக்
                குமரித் துறையில் படுமுத்தும்
        கொற்கைத் துறையில் துறைவாணர்
                குளிக்கும் சலாபக் குவான்முத்தும்

ஆடும் பெருந்தண் துறைப்பொருநை
                ஆற்றில் படுதெள் நிலாமுத்தும்
        அந்தண் பொதியத் தடம்சாரல்
                அருவி சொரியும் குளிர்முத்தும்

வாடுங் கொடிநுண் நுசுப்புஒசிய
                மடவ மகளிர் உடன்ஆடும்
        வண்டல் துறைக்கு வைத்துநெய்த்து
                மணந்தாழ் நறுமென் புகைப்படலம்

மூடும் குழலாய் நின்கனிவாய்
                முத்தம் தருக முத்தமே
        முக்கண் சுடர்க்கு விருந்துஇடும்மும்
                முலையாய் முத்தம் தருகவே
உரை