48

(வேறு)

பைவைத்த துத்திப் பரூஉச்சுடிகை முன்றில்
                பசுங்கொடி உடுக்கை கிழியப்
        பாய்இருள் படலம் கிழித்துஎழு சுடர்ப்பரிதி
                பரிதிக் கொடிஞ்சி மான்தேர்

மொய்வைத்த கொய்உளை வயப்புரவி வாய்ச்செல்ல
                முள்கோல் பிடித்து நெடுவான்
        முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில்கொடி
                முனைக்கணை வடிம்பு நக்கா

மைவைத்த செஞ்சிலையும் அம்புலியும் ஒடநெடு
                வான்மீன் மணந்து கந்த
        வடவரை முகந்தநின் வயக்கொடி எனப்பொலியும்
                மஞ்சுஇவர் வளாக நொச்சித்

தெய்வத் தமிழ்க்கூடல் தழையத் தழைத்தவள
்                 திருப்பவள முத்தம் அருளே
        சேல்வைத்த ஒண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
                திருப்பவள முத்தம் அருளே
உரை