49
பின்னல் திரைக்கடல் மதுக்குடம் அறத்தேக்கு
                பெய்முகில் கார்உ டலவெண்
        பிறைமதிக் கூன்குயக் கைக்கடைஞ ரொடுபுடை
                பெயர்ந்துஇடை நுடங்க ஒல்கு

மின்னல் தடித்துக் கரும்பொன் தொடிக்கடைசி
                மெல்லியர் வெரீஇப் பெயரவான்
        மீன்கணம் வெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளும்
                விண்புலம் விளைவு லம்எனக்

கன்னல் பெருங்காடு கற்பகக் காட்டுவளர்
                கடவுள்மா கவளம் கொளக்
        காமதே னுவும்நின்று கடைவாய் குதட்டக்
                கதிர்க்குலை முதிர்ந்து விளையும்

செந்நெல் படப்பைமது ரைப்பதி புரப்பவள்
                திருப்பவள முத்தம் அருளே
        சேல்வைத்த ஒண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
                திருப்பவள முத்தம் அருளே
உரை