50
சங்குஓ லிடும்கடல் தானைக்கு வெந்நிடு
                தராபதிகள் முன்றில்தூர்த்த
        தமனியக் குப்பையும் திசைமுதல்வர் தடமுடித்
                தாமமும் தலைமயங்கக்

கொங்குஓல் இடும்கைக் கொடுங்கோ லொடும்திரி
                குறும்பன் கொடிச்சுறவுநின்
        கொற்றப் பதாகைக் குழாத்தினொடும் இரசதக்
                குன்றினும் சென்றுஉலாவப்

பொங்குஓல வேலைப் புறத்தினொடு அகத்தின்இமிர்
                போர்ஆழி பரிதிஇரதப்
        பொங்குஆழி மற்றப் பொருப்புஆழி யில்திரி
                புலம்பைப் புலம்புசெய்யச்

செங்கோல் திருத்திய முடிச்செழியர் கோமள்
                திருப்பவள முத்தம்அருளே
        சேல்வைத்த ஒண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
                திருப்பவள முத்தம்அருளே
உரை