52
புதையிருள் கிழிதர எழுதரு பரிதிவ
                ளைத்தக டல்புவியில்
        பொதுஅற அடிமைசெய் திடுவழி அடியர்பொ
                ருட்டுஅலர் வட்டணையில்

ததைமலர் பொதுளிய களியளி குமிறுகு
                ழல்திரு வைத்தவளச்
        சததள முளரியின் வனிதையை உதவுக
                டைக்கண்ம டப்பிடியே

பதுமமொடு ஒழுகுஒளி வளையும்நின் நளினமு
                கத்தும் மிடற்றுறும்உறப்
        பனிமதி யொடுசுவை அமுதமும் நுதலொடு
                சொற்குத லைக்கண்நிறீஇ

முதுதமிழ் உததியில் வரும்ஒரு திருமகள்
                முத்தம் அளித்தருளே
        முழுதுஉலகு உடையதொர் கவுரியர் குலமணி
                முத்தம் அளித்தருளே
உரை