குண்டுபடு பேர்அகழி வயிறுஉளைந்து ஈன்றபைங் கோதையும் மதுரம்ஒழுகும் கொழிதமிழ்ப் பனுவல் துறைப்படியும் மடநடைக் கூந்தல்அம் பிடியும் அறுகால் வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ மணங்கமழ விண்டதொண்டர் மானதத் தடமலர்ப் பொன்கோயில் குடிகொண்ட மாணிக்க வல்லிவில்வேள் துண்டுபடு மதிநுதல் தோகையொடும் அளவில்பல தொல்உரு எடுத்துஅமர்செயும் தொடுசிலை எனக்ககன முகடுமுட் டிப்பூந் துணர்த்தலை வணங்கிநிற்கும் கண்டுபடும் கன்னல்பைங் காடுபடு கூடல் கலாபமா மயில்வருகவே கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி கயல்கண்நா யகிவருகவே |