வடம்பட்ட நின்துணைக் கொங்கைக் குடம்கொட்டு மதுரஅமு துண்டுகடைவாய் வழியும்வெள் அருவியென நிலவுபொழி கிம்புரி மருப்பில் பொருப்புஇடித்துத் தடம்பட்ட பொன்தாது சிந்துரம் கும்பத் தலத்துஅணிவது ஒப்பஅப்பிச் சலராசி ஏழும் தடக்கையின் முகந்துபின் தானநீ ரால்நிரப்பி முடம்பட்ட மதியம் குசப்படை எனக்ககன முகடுகை தடவிஉடுமீன் முத்தம் பதித்திட்ட முகபடாம் எனவெழு முகில்படாம் நெற்றிசுற்றும் கடம்பட்ட சிறுகண் பெருங்கொலைய மழஇளங் களிறுஈன்ற பிடிவருகவே கற்பக அடவியில் கடம்பாடு அடவிப்பொலி கயல்கண்நா யகிவருகவே |