(வேறு) வடக்குங் குமக்குன்று இரண்டுஏந்தும் வண்டல் மகளிர் சிறுமுற்றில் வாரிக் குவித்த மணிக்குப்பை வான்ஆறு அடைப்ப வழிபிழைத்து நடக்கும் கதிர்பொன் பரிசிலா நகுவெண் பிறைகைத் தோணியதா நாள்மீன் பரப்புச் சிறுமிதப்பா நாப்பண் மிதப்ப நால்கோட்டுக் கடக்குஞ் சரத்தின் மதநதியும் கங்கா நதியும் எதிர்கொள்ளக் ககன வெளியும் கற்பகப்பூங் காடும் கடந்து கடல்சுருங்க மடுக்கும் திரைத்தண் துறைவைகை வளநாட்டு் அரசே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே |