சுண்ணம் திமிர்ந்து தேனருவி துளைந்தாடு அறுகால் தும்பிபசும ் தோட்டுக் கதவம் திறப்பமலர்த் தோகை குடிபுக்கு ஓகைசெயும் தண்ணம் கமலக் கோயில்பல சமைத்த மருதத் தச்சன்முழு தாற்றுக் கமுகு நாற்றிஇடும் தடங்கா வணப்பந்த ரில்வீக்கும் விண்ணம் பொதிந்த மேகபடாம் மிசைத்தூக் கியபன் மணிக்கொத்து விரிந்தால் எனக்கால் நிமிர்ந்துதலை விரியும் குலைநெல் கற்றைபல வண்ணம் பொலியும் பண்ணைவயல் மதுரைக்கு அரசே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே |