பிரமதேவர் (வேறு) மேகப் பசுங்குழவி வாய்மடுத்து உண்ணவும் விண்புலம் விருந்து அரவும் வெள்ளமுதம் வீசும் கருந்திரைப் பைந்துகில் விரித்துஉடுத்து உத்தி விரியும் நாகத்து மீச்சுடிகை நடுவண் கிடந்தமட நங்கையைப் பெற்று மற்றுஅந் நாகனைத் துஞ்சுதன் தந்தைக்கு வந்துஉதவு நளினக் குழந்தை காக்க பாகத்து மரகதக் குன்றுஒன்றுஓர் தமனியக் குன்றொடு கிளைத்து நின்ற பவளத் தடங்குன்று உளக்கண்ணது என்றப் பரஞ்சுடர் முடிக்கு முடிமூன்று ஆகத்து அமைத்துப்பின் ஒருமுடிதன் முடிவைத்து அணங்கு அரசு வீற்றி ருக்கும் அபிடேக வல்லியை அளிக்குலம் முழக்குகுழல் அங்கயற் கண் அமுதையே |