தகரக் குழலின் நறையும்நறை தருதீம் புகையும் திசைக்களிற்றின் தடக்கை நாசிப் புழைமடுப்பத் தளரும் சிறு நுண் மருங்குல்பெரும் சிகரக் களபப் பொம்மல்முலைத் தெய்வ மகளிர் புடைஇரட்டும் செங்கைக் கவரி முகந்துஎறியும் சிறுகால்கு ஒசிந்து குடிவாங்க முகரக் களிவண்டு அடைகிடக்கும் முளரிக் கொடிக்கும் கலைக்கொடிக்கும் முருந்து முறுவல் விருந்திடுபுன் மூரல் நெடுவெண்ணிலவுஎறிப்ப மகரக் கருங்கண் செங்கனிவாய் மடமான் கன்று வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே |