கண்டுபடு குதலைப் பசுங்கிளி இவட்குஒரு கலாபேதம் என்னநின்னைக் கலைமறைகள் முறையிடுவ கண்டோ அலாதுஒண் கலாநிதி எனத்தெரிந்தோ வண்டுபடு தெரியல் திருத்தாதை யார்மரபின் வழிமுதல் எனக்குறித்தோ வளர்சடைமுடிக்குஎந்தை தண்நறும் கண்ணியா வைத்தது கடைப்பிடித்தோ குண்டுபடு பால்கடல் வரும்திருச் சேடியொடு கூடப் பிறந்துஓர்ந்தோ கோமாட்டி இவள்நின்னை வம்எனக் கொம்எனக் கூவிடப் பெற்றாய்உனக்கு அண்டுபடு சீர்இதுஅன் றுஆதலால் இவளுடன் அம்புலீ ஆடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆடவாவே |