கீற்றுமதி எனநிலவு தோற்றுபரு வத்தில்ஒளி கிளர்நுதல் செவ்விவவ்விக் கெண்டைத் தடங்கணார் எருவிட்டு இறைஞ்சக் கிடந்ததும் உடைந்துஅமுதம்விண்டு ஊற்றுபுது வெண்கலை உடுத்துமுழு மதிஎன உதித்தஅமை யத்தும் அம்மை ஒண்முகத்து ஒழுகுதிரு அழகைக் கவர்ந்துகொண்டு ஓடினது நிற்கமற்றை மாற்றவ ளொடும்கேள்வர் மௌலியில் உறைந்ததும் மறந்துஉனை அழைத்தபொழுதே மற்றுஇவள் பெருங்கருணை சொற்றிடக் கடவதோ மண்முழுதும் விம்முபுயம்வைத்து ஆற்றுமுடி அரசுஉதவும் அரசுஇளங் குமரியுடன் அம்புலீ ஆடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆடவாவே |