விண்தலம் பொலியப் பொலிந்திடுதி யேல்உனது வெம்பணிப் பகைவிழுங்கி விக்கிடக் கக்கிடத் தொக்குஇடர்ப் படுதிவெயில் விரியும் சுடர்ப்பரிதியின் மண்டலம் புக்கனை இருத்திஎனின் ஒள்ஒளி மழுங்கிட அழுங்கிடுதிபொன் வளர்சடைக் காட்டுஎந்தை வைத்திடப் பெறுதியேல் மாசுணம் சுற்றஅச்சம் கொண்டுகண் துஞ்சாது இருப்பதும் மருப்பொங்கு கோதைஇவள் சீறடிகள்நின் குடர்குழம் பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி பால்அடைந்தால் அண்டபகி ரண்டமும் அகண்டமும் பெறுதியால் அம்புலீ ஆடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆடவாவே |