எண்ணில்பல புவனப் பெருந்தட்டை ஊடுருவி இவள்பெரும் புகழ்நெடுநிலா எங்கணும் நிறைந்திடுவது அங்குஅதனின் மெள்ளநீ எவ்வளவு மொண்டுகொண்டு வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்துஇவள் விழிக்கடை கொழித்தகருணை வெள்ளம் திளைத்துஆடு பெற்றியால் தண்அளி விளைப்பதும் பெற்றனைகொலாம் மண்ணில்ஒண் பைங்கூழ் வளர்ப்பதும் இடத்துஅம்மை வைத்திடும் சத்தியேகாண் மற்றுஒரு சுதந்தரம் நினக்குஎன இலைக்கலை மதிக்கடவுள் நீயும்உணர்வாய் அண்ணல்அம் களியானை அரசர்கோ மகளுடன் அம்புலீ ஆடவாவே ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் அம்புலீ ஆடவாவே |