தேவேந்திரன் (வேறு) சுழியும் கருங்கண் குண்டுஅகழி சுவற்றும் சுடர்வேல் கிரிதிரித்த தோன்றற்கு அளித்துச் சுறஉயர்த்த சொக்கப் பெருமான் செக்கர்முடி பொழியும் தரங்கக் கங்கைவிரைப் புனல்கால் பாய்ச்சத் தழைந்துவிரி புவனம் தனிப்பூத்து அருள்பழுத்த பொன்னங் கொடியைப் புரக்கவழிந்து இழியும் துணர்க் கற்பகத்தின்நறவு இதழ்த்தேன் குடித்துக் குமட்டிஎதிர் எடுக்குஉ சிறைவண்டு உவட்டுஉறடுண் இரைக்கக் கரைக்கும் மதக்கலுழிக் குழியும் சிறுகண் ஏற்றுஉருமுக் குரல்வெண் புயலும் கரும்புயலும் குன்றம் குலைய உகைத்துஏறும் குலிசத் தடக்கைப் புத்தேளே |