குலைப்பட்ட காந்தள் தளிர்க்கையில் செம்மணி குயின்றஅம் மனைநித்திலம் கோத்தஅம் மனைமுன் செலப்பின் செலும்தன்மை கோகனக மனையாட்டிபால் கலைப்பட்ட வெண்சுடர்க் கடவுள்தோய்ந்து ஏகஅது கண்டுகொண்டே புழுங்கும் காய்கதிர்க் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்பக் கறங்குஅருவி தூங்கஓங்கும் மலைபட்ட ஆரமும் வயிரமும் பிறவும்அம்மா மாமணித் திரளைவாரி மறிதிரைக் கையால் எடுத்துஎறிய நாற்கோட்டு மதகளிறு பிளிறிஓடும் அலைபட்ட வைகைத் துறைச்சிறை அனப்பேடை அம்மானை ஆடிஅருளே ஆகம்க லந்துஒருவர் பாகம் பகிர்ந்தபெண் அம்மானை ஆடிஅருளே |