(வேறு) முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர் முளரிம ணம்கமழ மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின் முயங்கி மயங்கியிடக் கொத்து மணித்திர ளில்செயும் அம்மனை குயிலின்மி ழற்றியநின் குழலின் இசைக்குஉரு கிப்பனி தூங்கு குறுந்துளி சிந்தியிட வித்துரு மத்தில் இழைத்தவும் நின்கை விரல்பவ ளத்தளிரின் விளைதரும் ஒள்ஒளி திருடப் போவதும் மீள்வது மாய்த்திரிய அத்தன் மனத்துஎழு தியஉயிர் ஓவியம் ஆடுக அம்மனையே அழகு தழைந்தகல் யாண சவுந்தரி ஆடுக அம்மனையே |