திருமகள் (வேறு) வெஞ்சூட்டு நெட்டுஉடல் விரிக்கும் படப்பாயல் மீமிசைத் துஞ்சும் நீல மேகத்தின் ஆகத்து விடுசுடர்ப் படலைமணி மென்பரல் உறுத்த நொந்து பஞ்சு ஊட்டு சீறடி பதைத்தும் அதன் வெங்கதிர்ப் படும்இள வெயிற்கு உடைந்தும் பைந்துழாய்க் காடுவிரி தண்நிழல் ஒதுங்கும்ஒர் பசுங்கொடியை அஞ்ச லிப்பாம் மஞ்சூட்ட கட்டுநெடு வான்முகடு துருவும்ஒரு மறைஓ திமம்ச லிக்க மறிதிரைச் சிறைவிரியும் ஆயிர முகக்கடவுள் மந்தா கினிப்பெ யர்த்த செஞ்சூட்டு வெள்ஓ திமம்குடி இருக்கும்வளர் செஞ்சடைக் கருமி டற்றுத் தேவுக்கு முன்நின்ற தெய்வத்தை மும்முலைத் திருவைப் புரக்க என்றே |