கைம்மல ரில்பொலி கதிர்முத்து அம்மனை நகைமுத்து ஒளிதோயக் கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக் கமலச் சுடர் கதுவச் செம்மணி யில்செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்விய வவ்விய பின்கரு மணியில் செய்தன கொல்எனவும் தம்மனம் ஒப்ப உரைப்பன மற்றைச் சமயத்து அமைவுபெறார் தத்தமில் நின்று பிதற்றுவ பொருவத் தனிமுதல் யாம்என்பார்க்கு அம்மனை ஆயவர் தம்மனை ஆனவள் ஆடுக அம்மனையே அழகு தழைந்தகல் யாண சவுந்தரி ஆடுக அம்மனையே |