நிரைபொங் கிடும்செங்கை வெள்வளை கலிப்பநகை நிலவுவிரி பவளம்வெளிர நீலக் கருங்குவளை செங்குவளை பூப்பஅறல் நெறிகுழல் கற்றைசரியத் திரைபொங்கு தண்ணந் துறைக்குடைந்து ஆடுவ செழுந்தரங் கக்கங்கைநுண் சிறுதிவலை யாப்பொங்கும் ஆனந்த மாக்கடல் திளைத்துஆடு கின்றதுஏய்ப்பக் கரைபொங்கு மறிதிரைக் கையால் தடம்பணைக் கழனியில் கன்னியர்முலைக் களபக் குழம்பைக் கரைத்துவிட்டு அள்ளல் கருஞ்சேறு செஞ்சேற தாய் விரைபொங் கிடத்துங்க வேகவதி பொங்குபுது வெள்ளநீர் ஆடிஅருளே விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த வெள்ளநீர் ஆடிஅருளே. கொடி |