தூங்குசிறை அறுகால் உறங்குகுழல் நின் துணைத் தோழியர்கள் மேல்குங்குமம் தோயும் பனித்துறைச் சிவிறிவீ சக்குறுந் துளிஎம் மருங்கும்ஓடி வாங்குமலை வில்லியார் விண்உரு நனைத்துஅவர் வனைந்திடு திகம்பரம்செவ் வண்ணமாச் செய்வதுஅச் செவ்வான வண்ணரொடு மஞ்சள்விளை யாடல்ஏய்ப்பத் தேங்குமலை அருவிநெடு நீத்தத்து மாசுணத் திரள்புறம் சுற்றிஈர்ப்பச் சினவேழம் ஒன்றோடு சுழிச்சுழலல் மந்தரம் திரைகடல் மதித்தல்மானும் வீங்குபுனல் வைகைத் தடந்துறை குடைந்துபுது வெள்ளநீர் ஆடிஅருளே விடைக்கொடி யவர்க்குஒரு கயல்கொடி கொடுத்த வெள்ளநீர் ஆடிஅருளே (கொடி |