கொள்ளைவெள் அருவி படிந்திடும் இமயக் கூந்தல் மடப்பிடிபோல் கொற்கைத் துறையில் சிறைவிரி யப்புனல் குடையும் அனப்பெடைபோல் தெள்ளமு தக்கடல் நடுவில் தோன்று செழுங்கம லக்குயில்போல் தெய்வக் கங்கைத் திரையூடு எழும்ஒரு செம்பவ ளக்கொடிபோல் கள்அவிழ் கோதையர் குழலில் குழல்இசை கற்றுப் பொன்தருவில் களிநறவு உண்ட மடப்பெடை யோடு கலந்து முயங்கிவரிப் புள்உறை பூம்பொழில் மதுரைத் துரைமகள் புதுநீர் ஆடுகவே பொருநைத் துறையொடு குமரித் துறையவள் புதுநீர் ஆடுகவே |