ஒள்ஒளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும் ஒழுகுஒளிய வயிரவிட்டத்து ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய ஒண்தரள வடம்வீக்கியே அள்ளிட வழிந்துசெற்று ஒளிதுளும் பும்கிரண அருணரத் னப்பலகைபுக்கு ஆடுநின் தோற்றம்அப் பரிதிமண் டலம்வளர் அரும்பெரும் சுடரைஏய்ப்பத் தெள்ளுசுவை அமுதம் கனிந்தஆ னந்தத் திரைக்கடல் மடுத்துஉழக்கும் செல்வச் செருக்கர்கள் மனக்கமல நெக்கபூஞ் சேக்கையில் பழையபாடல் புள்ஒலி எழக்குடி புகுந்தசுந் தரவல்லி பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |