விற்பொலிய நிலவுபொழி வெண்நித் திலம்பூண்டு விழுதுபட மழகதிர்விடும் வெண்தரள ஊசலின் மிசைப்பொலிவ புண்டரிக வீட்டில் பொலிந்துமதுரச் சொல்பொலி பழம்பாடல் சொல்லுகின் றவளும்நின் சொருபம்என் பதும்இளநிலாத் தூற்றுமதி மண்டலத்து அமுதமாய் அம்மைநீ தோன்றுகின் றதும்விரிப்ப எல்பொலிய ஒழுகுமுழு மாணிக்க மணிமுகப்பு ஏறிமழை முகில்தவழ்வதுஅவ் எறிசுடர்க் கடவுள்திரு மடியில்அவன் மடமகள் இருந்துவிளை யாடல்ஏய்க்கும் பொன்புரிசை மதுரா புரிப்பொலி திருப்பாவை பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |