உருகிய பசும்பொன் அசும்பவெயில் வீசுபொன் ஊசலை உதைந்துஆடலும் ஒண்தளிர் அடிச்சுவடு உறப்பெறும் அசோகுநறவு ஒழுகுமலர் பூத்துஉதிர்வதுஉன் திருமுன்உரு வம்கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்குஇதுவெனாச் செஞ்சிலைக் கள்வன்ஒரு வன்தொடை மடக்காது தெரிகணைகள் சொரிவது ஏய்ப்ப எரிமணி குயின்றபொன் செய்குன்று மழகதிர் எறிப்பஎழு செஞ்சோதிஊடு இளமதி இமைப்பதுஉன் திருமுகச் செவ்விவேட்டு டெழுநாத் தலைத்தவம்அவன் புரிவது கடுக்கும்மது ராபுரி மடக்கிள்ளை பொன்ஊசல் ஆடிஅருளே புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி பொன்ஊசல் ஆடிஅருளே |