96
கங்கைமுடி மகிழ்நர்திரு உளம்அசைந் ஆடக்
                கலந்துஆடு பொன்ஊசல்அக்
        கடவுள்திரு நோக்கத்து நெக்குஉருகி யிடநின்
                கடைக்கண்நோக் கத்துமற்றுஅச்

செங்கண்விடை யவர்மனமும் ஒக்கக் கரைந்துஉருகு
                செய்கையவர் சித்தமேபொன்
        திருஊச லாஇருந்து ஆடுகின் றாய்எனும்
                செய்தியை எடுத்துஉரைப்ப

அங்கண்நெடு நிலம்விடர் படக்கிழித்து ஓடுவேர்
                அடியில் பழுத்தபலவின்
        அளிபொன் சுளைக்குடக் கனிஉடைந்து ஊற்றுதேன்
                அருவிபிலம் ஏழும்முட்டிப்

பொங்கிவரு பொழில்மதுர மதுரைநா யகிதிருப்
                பொன்ஊசல் ஆடிஅருளே
        புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
                பொன்ஊசல் ஆடிஅருளே
உரை