97
சேர்க்கும் சுவைப்பாடல் அமுதுஒழுக ஒழுகுபொன்
                திருஊசல் பாடிஆடச்
        சிவபிரான் திருமுடிஅசைப்பமுடி மேல்பொங்கு
                செங்கண்அரவு அரசுஅகிலம்வைத்து

ஆர்க்கும் பணாடவி அசைப்பச் சராசரமும்
                அசைகின்றது அம்மனைஅசைந்து
        ஆடலால் அண்டமும் அகண்டபகிர் அண்டமும்
                அசைந்துஆடு கின்றதுஏய்ப்பக்

கார்க்கொந் தளக்கோதை மடவியர் குழல்கூட்டு
                கமழ்நறும் புகைவிண்மிசைக்
        கைபரந்து எழுவதுஉரு மாறுஇரவி மண்டலம்
                கைக்கொளஇருள்படலம்வான்

போர்க்கின்ற தொக்குமது ராபுரி மடக்கிள்ளை
                பொன்ஊசல் ஆடிஅருளே
        புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
                பொன்ஊசல் ஆடிஅருளே
உரை